iPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.
எச்சரிக்கை :- இதை செய்வதற்கான படிமுறைகளை Step by Step ஆக தருகிறேன். இருந்தபோதும் முன் அனுபவம்/ Apple தயாரிப்புகள் பற்றிய போதுமான தெளிவு இல்லாமல் முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
- முதலில் இந்த இணைப்பில் சென்று உங்கள் iPod Version இற்குரிய Firmware இனை தரவிறக்கி கொள்ளுங்கள். Firmware
- iPod ஐ off செய்யுங்கள் ( இதன்போது iPod ஐ கணினியுடன் இணைத்திருக்கக் கூடாது)
- off செய்த பின்னர் Home பட்டனை அழுத்தியவாறே கணினியுடன் USB Cable மூலமாக இணையுங்கள். இணைத்ததும் உங்கள் iPod இல Restore Window ஓபின் ஆகும். அதன் பின்னரே Home பட்டனில் இருந்து கையை எடுங்கள்.
- இப்போது உங்கள் iPod திரை கீழ் கண்டவாறு இருக்கும்
இப்போது iTunes இற்கு வாருங்கள்
iTunes இல் உங்கள் iPod இன் விபரங்கள் காட்டப்படும். அதன் கீழே உள்ள Restore என்ற பட்டனை, கணினி கீபோர்டில் Shift கீயை அழுத்தியவாறே கிளிக் பண்ணுங்கள்
கிளிக் பண்ணியதும் புதிய விண்டோ Open ஆகும். அதில் ஏற்கனவே தரவிறக்கிய Firmware ஐ தெரிவு செய்யுங்கள்.
செலக்ட் செய்து Open செய்ததும் iPod Restore Process ஐ ஆரம்பிக்கும்
தயவு செய்து Restore Process முடியும் வரை iPod ஐ Disconnect பண்ணவேண்டாம். Restore Process முடிந்ததும் iPod Restart ஆகும். இப்போது உங்கள் iPod Restore ஆகியிருக்கும்
அவ்வளவும் தான் வேலை








1 comments:
வணக்கம்
கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய கூகிள்சிறிக்கு வாருங்கள்.http://www.googlesri.com/
யாழ் மஞ்சு
Post a Comment